|
லிம்பேர்க் தமிழ் நட்புறவு ஒன்றியம்
ஒன்றிய கீதம்:இயற்றியவர்:சி.வரதீஸ்வரன்(Brunssum)
ஸாரி ஸாரி
ஸாரி ஸா
ரிஸ ரிஸ ரிஸ ரி
ஸரி நிம பநி பம நிஸ கரி ஸா
ஸரி நிம பநி பம நிஸ கரி ஸா
எங்கள் லிம்பேர்க் தமிழ் ஒன்றியம் நட்பு
லிம்பேர்க் தமிழ் ஒன்றியம்
தமிழ் தனை வழர்த்திட்ட ஒன்றியமாம் தமிழ் தாயென வழர்ந்திடும்
ஒன்றியமாம்
கலை எனும் அழகில் கலாச்சாரமாய்
வடிவெனும் பாதையில் எழுந்திடுமாம்.(எங்கள் லிம்..)
ஒன்றே குலமென கூறிடுவோம் நாம்
ஓர் குடையின் கீழ் வாழ்ந்திடுவோம்
ஓற்றுமையாகவே ஓர் மனமாகவே
தமிழ் மணம் பரப்பிடும் ஒன்றியமாம்…(எங்கள் லிம்…)
எதிர் வரும் காலமதை வணங்கிடுவோம்
அங்கு இளைய தலைமுறையை வளர்த்திடுவோம்
இலக்கணம் என்னும் இலட்ச்சிய நோக்குடன்
நாம் புதிய பாதையில் வழி அமைத்திடுவோம்..(எங்கள் லிம்…)
உதய சூரியனின் ஒளியினைப் போல்
இங்கு உலகமெங்கும் அதைப் பரப்பிடுவோம்
புலம் பெயர் மக்களின் எண்ணமதைப்
பரப்பிட எழுந்திட்ட ஒன்றியமாம்..(எங்கள் லிம்…)
|