Home

 

         23-10-2006                                       Stg-V.v.T.L                      Contact                       

 

 

            

              

                        ஒன்றிய நிகழ்வுகள் 2006

லிம்பேர்க் தமிழ் நட்புறவு ஒன்றியமானது 2006 ல் பலவகையான தரமிக்க பல நிகழ்வுகளை நிகழ்த்தி நிறைவேற்றியுள்ளது.

அந்த வகையில் …..
28-01-2006 சனிக்கிழமை மாலை 18.00 மணியளவில் பாரீஸ் பன்முக கலைஞன் பராவின் “பேரன் பேர்த்தி” என்ற ஈழவர் குறும்படத்தை முதன்முதலாக ஹேர்லனில் திரையிட்டது.

இப்படக்காட்ச்சியில் இயக்குனர் பன்முக கலைஞன் பரா,பேரன் பேர்த்தியில் தாத்தாவாக நடித்த தமிழாழ் கூத்தவை இயக்குனர் ரகுநாதன்,கவிஞர் முகுந்தன் ஆகியோரை கௌரவ விருந்தினர்களாக வரவழைத்திருந்தது.

அடுத்த கட்டமாக கனடா வாழ் இந்திரசித்து தயாரிப்பில் உருவான
தமிழிச்சி என்ற ஈழவர் திரைப்படத்தை 19-03-2006 ஞாயிறு மாலை
15.00 மணியளவில் ஹேர்லனில் முற்றிலும் இலவசமாக அனைவருக்கும் ஒன்றியம் காண்பித்தது.

ஈழவர் குறும்படங்களை வெளியிடுவதன் மூலம் நம்மவர் திறமைகளை
நெதர்லாந்து வாழ் தமிழ் மக்கள் மத்தியில் வெளிக்கொண்டுவர முயற்ச்சித்த ஒன்றியம், பாரீஸ் தமிழாழ் கூத்தவை இயக்குனர் ரகுநாதன் தயாரிக்கும் மாபெரும் நேசம் எனும் நாடக தொடரில் தானும் பங்கேற்று அந்த நாடக தொடரை 14-04-2006 ஆரம்பித்து 18-04-2006 இல் முடித்துக்கொடுத்தது.

                ஒன்றியத்தின் அன்மீக யாத்திரைகள்

ஒன்றியமானது இவ்வருடமும் (11-06-2006) வழமைபோல் ஹம் காமாட்ச்சி அம்பாள் ஆலய ரதோற்சவத்திற்கு சிறப்பு பேரூந்து ஒன்றினை ஒழுங்கு செய்திருந்தது.45 அம்பாள் அடியவர்களுடன் ஒன்றிய சிறப்பு பேரூந்து ஹம் காமாட்ச்சி அம்பாள் ஆலயம் சென்று திரும்பியது.

அடுத்தபடியாக 25-06-2006 அன்று டென்கெல்டர் விநாயகர் அலய
ரதோற்சவத்திற்கும் சிறப்பு பேரூந்தினை ஒழுங்கு செய்தது.அத்துடன் விநாயகர் அடியார்களுக்கு தண்ணீர் பந்தல் அமைத்து தாக சாந்தி செய்தது.

                   ஒன்றிய கோடை கால கொண்டாட்டம்
24-06-2006,01-07-2006,02-07-2006

24-06-2006 அன்று ஒன்றியமானது தம்பி எனும் தமிழ் திரைப்படத்தை
ஹேர்லனில் முற்றிலும் இலவசமாக அனைவருக்கும் காண்பித்தது.

01-07-2006 அன்று பெமிதொசி 2006 என்ற விழாவை ஹேர்லன்
மாநகரசபையுடன் இணைந்து கொண்டாடியது.இவ்விழாவில் நமது
உணவுவகைகள் அனைத்தும் பார்வைக்காகவும் , விற்பனைக்காகவும்
வைக்கப்பட்டிருந்தன.

02-07-2006 அன்று பெமிதொசி 2006 ஐ திறந்த வெளியரங்கில்
பல நாடுகளுடன் இணைந்து கொண்டாடியது.இரண்டாயிரத்திற்கும்
மேற்பட்டோர் ஒன்றுசேரும் இவ் விழாவில் ஈழவர் உணவு வகைகள்,
உடைகள்,மளிகைப் பொருட்கள் ஆகியன ஒன்றியத்தால் விற்பனை செய்யப்பட்டது.அத்துடன் திறந்த வெளி அரங்கில் பரத நாட்டிய நிகழ்ச்சியும் இடம்பெற்றது.

07-10-2006 அன்று ஒன்றியம் தனது அகவை பத்து நிறைவு விழாவை
அகில இலங்கை இந்து சமய அபிவிருத்திச் சபை தலைவர் சுவாமி
தந்திரதேவா மகராஜ் தலைமையில் மிகவும் சிறப்பாக நிகழ்த்தி நிறைவேற்றியது.


21-10-2006 அன்று ஒன்றியமானது பரத கலைதனை அனைவருக்கம்
பயிற்றுவிப்பதற்காக பரத வகுப்பொன்றினை ஆரம்பித்துள்ளது.
ஓன்றிய நடனப்பள்ளியில் திருமதி சந்தோஸ் யாழினி பரத கலைதனை
அனைவருக்கும் பயிற்றுவிப்பார்.


நல்லதை நினை நல்லதே நடக்கும்
லிம்பேர்க் தமிழ் நட்புறவு ஒன்றிய நிர்வாக சபையினர்

 

 

 

 

 

 

 

 

 

 

 
 
 

                              [C] Copyright 2004-2006 www.Hollandtamilan.com      contact