Home

 

         21-10-2006                                    Stg-V.v.T.L             Contact //  Home      

 

   

            

              

               

      V.V.T.L  Programmes 2004 - 2005 


 

 

ஒன்றியமானது முதல் தடவையாக சித்திரை விழாவில் மலேசியாவில் www.Kaumaram.com என்ற இணையதளம் மூலம் முருகனுக்கு சேவைசெய்து வரும் திரு.மணியம் ,செல்வி ஆகியோரை  பிரதம விருந்தினர்களாக வரவழைத்து சித்திரை விழாவை வெகு சிறப்பாக நிகழ்த்தி நிறைவேற்றியது.

 06-06-2004 அன்று முதல் தடவையாக ஹம் காமாட்சி அம்பாள் ஆலயத்திற்கு ஆன்மீக யாத்திரை ஒன்றை ஒழுங்கு செய்தது.

 27-06-2004 டென்கெல்டர் விநாயகர் ஆலய ரதோற்சவத்தில் ஒன்றியமும்’ பங்கொடுத்து தாகசாந்தி நிலையம் ஒன்றை ஒன்றியம் நடத்தியது.

 2005ம் ஆண்டு நாட்காட்டியை ஒன்றியம் அச்சடித்து அனைவருக்கும் இலவசமாக வழங்கியது. 30-01-2005 ஒன்றியம் தமிழ் கல்விக்கழகத்துடன் ஒரு ஒன்றுகூடலை நடத்தியது.இந்த ஒன்றுகூடல் முலம் ஹேர்லன் மாநகரத்தில் தமிழ் கல்விக் கழகம் தமிழ் பாடசாலை ஓன்றை நிறுவ ஒன்றியம் இடவசதி செய்து கொடுத்தது.


19-02-2005 அன்று சுனாமியால் பாதிக்கப்ட்ட எம்மவருக்கு உதவுவதற்காக Cafe De Nor Heerlen உடன் இணைந்து சுனாமி நிதிசேகரிப்பு நிகழ்ச்சி ஒன்றினை நிகழ்த்தியது.
இந்நிகழ்ச்சி மூலம் 295 ஈரோ சேகரிக்கப்பட்டு தமிழர் புனர்வாழ்வுக்கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.


 22-05-2005 அன்று ஹம் காமாட்ச்சி அம்பாள் ஆலய ரதேற்சவ யாத்திரை
 26-06-2005 டென்கெல்டர் விநாயகர் ஆலய ரதோற்சவ யாத்திரையும் தாகசாந்தி நிலையமும். 28-06-2005 ஒன்றயமானது ஹேர்லன் மாநகராட்சியுடன் இணைந்து முதன்முதலாக Pemi Tochi 2005 என்ற நிகழ்சியை நிகழ்த்தியது.இந்நிகழ்வில் புதிய தமிழ் திரைப்படம்(மும்பை எக்ஸ்பிரஸ்) இலவசமாக் காண்பிக்கப்பட்டது.அத்துடன் பலகாரங்கள் இலவசமாக வழங்கப்பட்டது.

 02-07-2005 அன்று ஒன்றியமானது சிறுவர்களுக்காக மட்டும் சிறுவர் அரங்கம் என்ற நிகழ்ச்சியை நடத்தியது.இந்நிகழ்ச்சியில் பங்குபற்றிய அனைத்து சிறுவர்களுக்கும் ஒன்றியம் மெக் டொனால்டில் பகல் உணவு வழங்கியது.
03-07-2005 அன்று ஒன்றியம் முதன்முதலாக ஹேர்லன் மாநகரில் திறந்த வெளியரங்கில் சாகரி இசைக்கழுவினரின் இசை நிகழ்ச்சி ஒன்றினை நிகழ்த்தியது.அத்துடன் 2 கூடாரங்களை நிறுவி அதில் இலங்கை உணவுகளை விற்றது.

லிம்பேர்க் தமிழ் நட்புறவு ஒன்றியமானது 2005ம் ஆண்டில் இந்து சமய வழர்ச்சிக்காகவும் எமது மக்களிடையே இந்து மத தத்துவங்களை பரப்பி ஒரு விழிப்புணர்ச்சியை உருவாக்குவதற்காகவும் அகில இலங்கை இந்து சமய அபிவிருத்திச் சபை தலைவர் சுவாமி தந்திரதேவா மகராஜ் அவர்களை முதன் முதலாக நெதர்லாந்திற்கு வரவழைத்து நெதர்லாந்தில் உள்ள அனைத்து இந்து ஆலயங்களிலும் பக்தி பிரசங்கங்களை மேற்கொண்டது.

அந்த வகையில் 18-11-05 அன்று டென்கெல்டர் விநாயகர் ஆலயத்தில் லிம்பேர்க்
தமிழ் நட்புறவு ஒன்றிய அனுசரனையுடன் சுவாமி தந்திரதேவா மகராஜின் முதலாவது “இந்து மதம் என்ற சொல்லின் பொருள் என்ன” என்ற பிரசங்கம் இனிதே நிகழ்ந்து நிறைவேறியது.

லிம்பேர்க் தமிழ் நட்புறவு ஒன்றியத்தின் தீபாவளி சிறப்பு நிகழ்வு 19-11-05 அன்று
தந்திரதேவா மகராஜின் தலைமையில் இனிதே நிகழ்ந்து நிறைவேறியது.

லிம்பேர்க் தமிழ் நட்புறவு ஒன்றிய அனுசரனையுடன் 20-11-05 அன்று
ரூர்மொண்ட் சிவசுப்பிரமணியர் ஆலயத்தில் சுவாமியின் இந்து மத சொற்பொழிவு இடம்பெற்றது.

 லிம்பேர்க் தமிழ் நட்புறவு ஒன்றிய அனுசரனையுடன் 25-11-05 அன்று
லிம்பேர்க் முருகன் ஆலயத்தில் சுவாமிகளின் சொற்பொழிவு இடம்பெற்றது.

 

 

 

 

 

 

 

 

 

 

 
 
 

                              [C] Copyright 2004-2006 www.Hollandtamilan.com      contact