லிம்பேர்க் தமிழ் நட்புறவு ஒன்றியமானது 1996 ஆம் ஆண்டில் லாந்த்கிறாவில்
இலங்கைத் தமிழர்களால் ஆரம்பிக்கப்பட்டது.வருடாவருடம் தமிழ் சித்திரை வருடப்பிறப்பையும்
தீபாவளி விழாவையும் ஒன்றியமானது சிறப்பாக நிகழ்த்தி வருகிறது.
1999 ஆம் ஆண்டு ஒன்றம் நெதர்லாந்தில் பதிவு செய்யப்பட்டது.2004ஆம் ஆண்டில் இருந்து
ஒன்றியமானது வருடத்திற்கு ஒரு கலைவிழா என்ற ரீதியில் இயங்கி வருகிறது.
2004 ஆண்டில் இருந்து ஒன்றியமானது ஆன்மீக பயணங்களையும் மேற்கொண்டுள்ளது.ஹம்
காமாட்ச்சி அம்மன் மற்றும் டென்கெல்டர் வரதராஜ விநாயகர் ஆலயத்திற்கு சிறப்பு
பேரூந்து மூலம் அடியவர்களை
அழைத்து சென்றுள்ளது.
26-12-2004 சுனாமியால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்காக Cafe De Nor Heerlen
உடன் இணைந்து Sri Lankan Buffet ஒன்றினை நடத்தி அதில் கிடைக்கப்பெற்ற பணத்தை
தமிழர் புணர்வாழ்வு கழகம் நெதர்லாந்திடம் ஒப்படைத்துள்ளது.
ஒன்றியமானது அகில இலங்கை இந்து சமய அபிவிருத்திச் சபை தலைவர் சுவாமி தந்திரதேவ
மகராஜ் அவர்களை முதன்முதலாக நெதர்லாந்திற்கு வரவழைத்து,நெதர்லாந்தில் உள்ள அனைத்து
இந்து ஆலயங்களிலும் சுவாமிகளின் “இந்துவாக வாழ்வோம் இந்து தர்மம் காப்போம்” என்ற
கொள்கையை பரப்பிவருகிறது.